இயற்கை சீற்ற மேலாண்மை் :: சுற்றுச்சூழல் மாசுபடுதல் 

மண் மாசுபடுதல்

மேலோட்டம்
மண் பின்வரும் காரணிகளால் மாசுபடுகின்றது.

  • திடக்கழிவுகள் தேக்கத்தால் ஏற்படுவது
  • உயிரியல் சுழற்ச ஏற்படாத பொருள்களின் சேர்க்கையால்
  • வேதியியல் பொருள்கள் நச்சுகளாக மாறுதல்
  • மண் வேதியியல் பங்கீடுகளின் மாற்றத்தால் ஏற்படுவது  (மண்ணின் வேதியியல் குணங்களில் ஏற்படும் சம நிலையின்மையால்)

இந்த பூமியில் அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதும், அதன் ஒவ்வோர் பொருளின் அடித்தனத்தையும், வாழ்வினையும்
அச்சமூட்டுவது நில மாசபாடே ஆகும். புள்ளியில் விவரங்களின் படி,

  • ஒரு வருடத்தில் 6 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பின் இழப்பு
  • ஒரு வருடத்தில் 24 மில்லியன் டன் மேல்புர மண் அரிப்பு ஏற்படுகிறது
  • ஒரு வருடத்தில் 15 மில்லியன் ஏக்கர் வேளாண் விளைநிலங்கள் அதிகபட்ட பயன்பாட்டிலும் தரமற்ற மேலாண்மையினாலும் இழக்கப்படுகின்றது
  • பாலைவனமாக மாறும் நிலங்கள் மூலம் 16 மில்லியன் சதுர மைல் அளவு உலகின் நிலப்பரப்பு இழக்கப்படுகின்றது

இரண்டு வகையான முறையற்ற செயல்பாட்டால் நிலங்கள் / மண்கள் வீணாகிறது. அவை பின்வருமாறு
1.ஆரோக்கியமற்ற மண் மேம்பாட்டு முறைகள்

  • முறையற்ற உழவினால் மண்ணின் தன்மை வீணாகுதல்
  • அங்ககம் பொருட்களின் நிலையற்ற விகிதம் அதாவது நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் சல்பர் போன்ற அங்ககப் பொருட்களின் விகிதம் நிலையற்று இருப்பதினால் மண்ணின் செழுமை மாறுவதோடு மட்டுமல்லாமல், பாலைவன மண்ணாக மாறுதல்
  • ஊட்டப்பொருள் (அ) சத்துப்பொருட்கள் மண்ணில் முறையற்ற பாதுகாப்பில் இருக்கும் போது, செயற்கை உரங்களானது அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்த உரங்கள் உயிற்சிதைவற்ற நிலையிலிருப்பதால் இவைகள் மண்ணில் குவிகின்றது. இவை மண்ணிலுள்ள உயிரணுக்களான பாக்டீரியா, பூசணங்கள் மற்றும் பிற உணிரணுக்களை அழிக்கிறது
  • மண்ணின் அமிலத்தன்மையின் முறையற்ற பாதுகாப்பினால் பயிரப்படும் வெவ்வேறு பயிர்களின் தன்மையை பாதிக்கிறது. இதுமட்டுமல்லாமல் மண்ணின் கனிமங்களின் தன்மையை குறைக்கிறது. அதிக அமிலமுள்ள மண்ணில் கனிமங்கள் கரையத்தக்க நிலையிலிருப்பதால் மழைக்காலத்தில் அவை கரைந்து மழைநீருடன் சென்றுவிடுகிறது. களர் மண்ணில் கனிமங்கள் கரைக்க முடியாத தன்மையில் இருப்பதால் கலப்பு அங்ககப் பொருட்களை உறிஞ்சும் தன்மையற்று காணப்படுகிறது

2. முறையற்ற நீர்பாசன முறைகள்

  • குறைவான வடிதல் தன்மையுடைய மண்ணின் நிலையால் மண்ணில் உப்பு படிதல் அதிகமாகி உவர்நிலையை அதிகரிக்கிறது. இதனால் பயிர்களின் வளர்ச்சிகள் பாதிப்பது மட்டுமல்லாமல் பயிர்களை அழைக்கிறது.
  • நீர் பாசனமற்ற நிலமானது குவிக்கப்பட்டிருக்கும் வேளாண்மை பயன்பாட பொருள்களை பண்படுத்துவதில்லை. இதனால் நிலத்தின் நச்சுத்தன்மை அதிகரிக்கிறது
  • சரியற்ற நீர்பாசனமானது மண்ணின் ஈரத்தன்மையை குறைப்பதுடன் தாதுக்களின் கரைப்பானில் பற்றாக்குறை ஏற்படுகிறது

ஆதாரங்கள் மற்றும் முறைகள்
நிலத்தின் மாசுபாட்டிற்கு கீழ்கண்டவை முக்கிய ஆதாரமாக நிகழ்கிறது. அவைகளின் வகைகள் பின்வருமாறு.

  • வேளாண்மை
  • சுரங்கம் மற்றும் கற்சுரங்கம்
  • கழிவு தேக்கம்
  • கழிவு நீரோட்டம்
  • வீட்டுமனைகள்
  • தகர்ப்பு மற்றும் கட்டுமானம்
  • தொழிற்சாலைகள்

மண் / நிலம் மாசுபாட்டினால் மனிதர்களுக்கு ஏற்படும் விளைவுகள்


மண் மற்றும் நீர் மாசுபாடு

  • இரத்த புற்றுநோயை உள்ளடக்கிய புற்றுநோய்களுக்கு காரணமாக அமைதல்
  • குழந்தைகளின் மூளைக்கு பாதிப்பாக அமைதல்
  • பாதரசமானது சிறுநீரக சேதத்தையும், சைக்கலோடைனஸ் கல்லீரலில் நச்சுத்தன்மையையும் அதிகரிக்கிறது
  • நரம்பு தசையில் அடைப்பு ஏற்படுதல் மற்றும் மத்திய நரம்பு இயக்கத்தில் ஒருவித பதற்ற அழுத்தம் ஏற்படுதல்
  • தலைவலி, குமட்டல், களைப்பு, கண் எரிச்சல் மற்றும் தோல் நோய் ஏற்படுதல்

மற்றவை

  • பாதிக்கப்பட்ட மண்ணுடன் நேரடியாக (பூங்கா, பள்ளி போன்றவற்றை பயன்படுத்துதல்) அல்லது மறைமுகமாக (ஆவியாகுதல்) போன்றவற்றுடன் தொடர்பு
  • மண் மாசுபாடு என்பது நீர் மாசுபாட்டின் இரண்டாம் நிலை மற்றும் காற்று மாசுபாட்டின் படிதல் (எ-டு - அமில மழை)
  • மாசுபாடுடைந்த மண்ணில் பயிர்கள் விளைவிக்கப்படுவதால் உணவு பாதுகாப்பில் பிரச்சனைகள் ஏற்படுதல்
  • இது நீருடன் தொடர்புடையவையாகும். நீரில் பாதிப்பு இருக்கும் போது மண்ணானது மாசுபடுகிறது

மண் மாசுபாட்டினால் விலங்குகளுக்கு ஏற்படும் விளைவு:

  • நுண்ணுயிர்களின் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் கணுக்காலிகள் போன்றவையானது மண்ணின் சூழ்நிலையை பொருத்து மாறுபடும். இவை முதல்நிலை உணவு சங்கிலியின் சில பகுதிகளை அழித்து மற்ற விலங்குகளை உண்ணும் விலங்கு இனங்களுக்கு எதிர்மறை விளைவாக அமைகிறது
  • சிறிய விலங்குகள் நச்சுத்தன்மை வாய்ந்த இரசாயன உணவுகளை உட்கொள்ளும்போது இந்த உணவு சங்கிலி, பெரிய விலங்குகள் வரை பாதிக்கிறது. இதனால் இவைகளின் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

மண் மாசுபாட்டினால் மரங்கள் மற்றும் தாவரங்களில் ஏற்படும் விளைவு:

  • தாவரங்களில் வளர்சிதை மாற்றத்தில் மாறுபட்டு மற்றும் விளைச்சலில் குறைவு
  • மரங்கள் மற்றும் தாவரங்கள் மண்ணின் நச்சுத் தன்மையை உறிஞ்சி உணவு சங்கிலி வரை அதன் நச்சுதன்மையை கொண்டு வருதல்

உப்புத்தன்மையுடை மண்:
மண்ணின் உப்புத்தன்மையை அதிகரிப்பதால் மண்ணின் தன்மையானது பாதிக்கப்படுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பற்றாக்குறையாக உள்ள சாக்கடை வசதிகள் மற்றும் நல்ல பாசனவசதி உள்ள பகுதிகளில் உப்பானது எளிதாக மண்ணின் மேற்புரத்தில் படிகிறது. மண்ணில் அடிப்புறத்திலுள்ள உப்பானது கோடை காலத்தின் போது ஏற்படும் வெடிப்பில் மேலே வந்து மண்ணின் மேற்புரத்தில் படிகிறது. குறைந்த வடிகால் வசதியுடன் இந்நிலையில் தீவிர சாகுபடி மேற்கொள்ளும் போது மண்ணின் உவர்தன்மையானது அதிகரிக்கிறது.
நம் நாட்டில் உவர் நிலமானது 6 மில்லியன் ஹெக்டேராகும் பஞ்சாப்பில் மட்டும் 6000-8000 ஹெக்டேர்களாகும். உலகின் வறண்ட மற்றும் வறண்ட பகுதியில் 6 ல் ஒரு பகுதி அதிக உவர்தன்மையை கொண்டிருக்கும். 
சில மண் மாசுக்கள் மற்றும் அதன் தாக்கங்கள்:

  • ஃபுளோரைட்ஸ்:

பச்சையத்திலுள்ள மாங்கனீசுடன் ஃபுளோரைட்ஸ் இணைந்து ஒளித்தொகுப்பினை தடுக்கிறது. இதனால் இலைகள் மற்றும் காய்கள் உதிர்ந்து விடுகிறது. ஃபுளோரைடு மாசுபாட்டிற்கு மக்காச் சோளம் எளிதில் பாதிக்கக்கூடிய பயிராகும். இவற்றின் தாக்கத்தால் மனிதர்களின் பற்களில் கறை எற்படும். எலும்பு ஃபுளோரைட்ஸினால் வழுவற்ற எலும்பு படகு போன்ற அமைப்பு மற்றும் வளைந்த முழங்கால் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

  • தழைச்சத்து உரமிடுதல் (நைட்ரேட்ஸ் + நைட்ரைடு):

நச்சுத்தன்மையானது இலைகள் மற்றும் பழங்கள் மூலம் உணவு சங்கிலியில் நுழைகிறது. பாக்டீரியாக்கள் உணவுப் பாதையில் நைட்ரேட்ஸை நைட்ரைட்டாக மாற்றுகிறது. பின்னர் இவை இரத்தத்தில் நுழைந்து ஹீமோகுளோபினுடன் இணைந்து மெட்டா ஹீமோகுளோபினை உருவாக்குகிறது. இதனால் ஆக்ஸிஜனின் கடத்தும் திறமானது குறைகிறது. இதன் தாக்கத்தால் மெத்தனமோகுளோபிநீமியா என்ற நோயின் தாக்கம் அதிகரிக்கிறது. மேலும் இந்த நோயினால் குழந்தைகளின் நிறம் நீலமாக மாறுகிறது. இந்த நைட்ரேட் நச்சுக்களின் போது மெத்தலின் புளு என்ற மருந்தினை ஊசியின் மூலம் குழந்தைகளுக்கு செலுத்தப்படாமலிருந்தால் உயிர் சேதம் ஏற்படும். மேலும் இவை மனிதர்களை தாக்கும் பொழுது மூச்சுத்தினறல் ஏற்படும்.

  • களைக் கொல்லிகள்:

இவைகள் வளர்ச்சிதை மாற்றத்தை தடுப்பதனால் ஒளிச்சேர்க்கையானது தடுக்கப்பட்டு மற்ற வளர்ச்சிதை மாற்ற செயல்களானது தாவரங்களை அழித்து விடுகின்றது. சில தருணங்களில் போலியம் (phloem) திசுவானது அங்கக உணவினை தடுப்பதால் பயிரானது அழிந்து விடுகிறது.
மாசு கட்டுப்பாடு:
காற்று வழி தெளிப்பான்:

  • பெட்ரோல் பொருட்களிள் வெடிக்கும் தன்மையை குறைப்பதால் அவை மண்ணினால் உறிஞ்சப்படுகிறது. இவை நிலத்தடிநீரில்படிந்து பாதிப்பினை தடுக்கும் தடுப்பான் இவை நிலகீழ் பகுதியில் அமைந்து பின்னர் இவை கரையும் தன்மையிலிருந்து நீராவி பகுதிக்கு செல்கிறது.

வேளாண் நடவடிக்கைகள் மூலம் மண் மாசு கட்டுப்பாடு:

  • பூச்சிக் கொல்லியின் பயன்பாட்டை குறைத்தல்
  • சரியான அளவில் உரத்தினை பயன்படுத்துதல்
  • பயிர் விளைச்சல் நுட்பத்தினை அதிகரிப்பதன் மூலம் களை வளர்ச்சியை தடுத்தல்
  • தனிப்பட்ட ஒரு குழியில் தேவையற்ற பொருட்களை குவித்தல்
  • மேய்தலை கட்டுப்படுத்துதல் மற்றும் வனமேம்பாடு
  • காற்று அரிப்பினை தடுக்க காற்று தடுப்பான் அல்லது கவசத்தினை அமல்படுத்துதல்
  • மண் அரிப்பினை தடுக்க அணை மற்றும் சரிவு பகுதியில் மண் கட்டமைப்பு தாவரங்கள் அல்லது புற்களை வளர்த்தல்
  • காடு வளர்ப்பு மற்றும் மீண்டும் வன வளர்ப்பு

 

 

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015